தமிழே திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி : மலையாள நடிகர் மம்முட்டி !
ஈழத் தமிழர்கள் உள்பட பாதிக்கப்பட்ட மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு என்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கூறியுள்ளார்.
மலையாளத்தை விட தமிழ் தான் மிக தொன்மையான மொழி. மலையாள மொழி உருவாகி 500 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால் தமிழ், 5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய மொழி. தமிழில் இருந்துதான் மலையாளம் உருவானது. திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய், தமிழ்தான் என்றார் மம்முட்டி. மேலும் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் தெரிவித்தார் மம்முட்டி.
தமிழின் பெருமை ஒரு மலையாளிக்கு தெரிகிறது தமிழர்களுக்கு தெரியவில்லையே ! தமிழா தமிழில் பேச பெருமைப்படு !!